துப்பாக்கி பாகங்களுடன் இராணுவ சிப்பாய் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

மஹியங்கனை – ரிதிமாலியத்த பகுதியில் துப்பாக்கி பாகங்களைத் தம்வசம் வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார், பெரியமடு இராணுவத்தளத்துடன் இணைந்து கடமைபுரியும் 36 வயதுடைய சிப்பாய்யே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநரை இன்று மஹியங்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து தன்னியக்க துப்பாக்கிக்கு பொருத்தப்படும் வெளிநாட்டுத் தயாரிப்பிலான 273 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலதிகமாக விமானங்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் தன்னியக்க துப்பாக்கிகளுக்கு பொருத்தும் 73 ரவைகள், துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2 இரும்புப் பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.