எந்தத் தடை வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்! ஜனாதிபதி அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடக நிறுவன பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமைஅமைப்புகள் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தொடர்பாக ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். நாட்டின் நன்மை கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அனைத்து பிரிவினரின் ஆதரவும் மிகவும் சிறப்பான முறையில் கிடைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.