மட்டக்களப்பில் இருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு புனரமைப்பதற்காக தோண்டிய குழியிலிருந்து மனித எலும்புக் கூடுகள் இன்று மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சத்ருக்கொண்டான் சவுக்கடி பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் வீட்டு திட்டத்திலுள்ள நபரொருவர், தனது காணியில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

குறித்த நபர் கிணறு ஒன்றை புனரமைப்பதற்காக குழி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, குழியிலிருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புகளும் இருந்துள்ள நிலையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடுகள் சுமார் 25 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்த தடயவியல் பிரிவு பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.