பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் : கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வயம்ப பல்கலைக்கழகத்தின் 12 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்தின் செரமிக் சந்தி முதல் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும், இதனால் கொழும்பு, கோட்டை பகுதியை அண்மித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...