சட்டவிரோதமாக தங்கியுள்ள மீனவர்ளை வெளியேறுமாறு கோரிக்கை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் சட்டவிரோத வாடி வீடுகளில் தங்கியிருந்த வெளிமாவட்ட மீனவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோதமாக வாடிகள் அமைத்து அத்துமீறி தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று நண்பகல் உள்ளூர் மீனவர்கள் அவர்களை சந்தித்து நட்பு ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது, உள்ளூர் மீனவர்களுக்கும் வெளிமாவட்ட மீனவர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்துமுரண்பாடுகளை தவிர்ப்பதற்காக சம்மந்தப்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உள்ளூர் மீனவர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெளிமாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவதாக இன்று வாக்குறுதி அளித்துள்ளனர்.