ஸ்ரீலங்கா சுதந்திர சங்க தொழிலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, இலங்கைத் துறைமுக அதிகார சபையில் தொழில் புரிகின்ற ஸ்ரீலங்கா சுதந்திர சங்க தொழிலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, சீனக்குடா பகுதியில் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் துறைமுக அதிகார சபைக்கு கொண்டு வரப்படுகின்ற பொருட்களுக்கான வரிப்பணம் ஒழுங்கான முறையில் செலுத்தப்படவில்லை என வலியுறுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரிப் பணமானது அரசுக்கு சேர வேண்டியது, வரிப் பணம் எங்களுக்குரியதல்ல அரசுக்கு சேர வேண்டிய பணமானது அரசுக்கு வழங்கப்படாவிடின் இழப்பு அரசுக்குரியதாகும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

குறித்த பிரச்சினைக்குரிய தீர்வு உடனடியாக எட்டப்படாவிடின் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers