புதையல் எடுக்கச் சென்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் தோப்பூர் பகுதியில் புதையல் எடுக்கச் சென்ற எட்டுப்பேரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.

தோப்பூர், ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 25 ,28, 29, வயதுடைய நால்வரும், ஹட்டன், வெலிஒயா, வட்டவெல பகுதியைச் சேர்ந்த 32, 27 மற்றும் 40 வயதுடைய எட்டுப் பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தோப்பூர் நல்லூர் பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த வேளையிலே எட்டுப்பேரை இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபர்களிடமிருந்த சவல், மண்வெட்டி மற்றும் அலவாங்கு, கூடைகள் போன்றவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்ததோடு குருக்கள் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Latest Offers