சிறுவர்களின் பார்வையில், விடுதலைப் போராட்டம்! தீபச்செல்வனின் நடுகல் பாரிஸில் வெளியாகிறது

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள நடுகல் நாவலுக்கு பாரிஸ் நகரில் அறிமுக விழா இடம்பெறவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 16.00 மணிக்கு 50 Place Torcy, 75018 Paris எனும் இடத்தில் இடம்பெறவுள்ளது.

2019ஆம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி முன்னிட்டு வெளியான நடுகல் நாவல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. வெளியாகி சில நாட்களிலேயே பல நூறு பிரதிகள் விற்கப்பட்டு, இரண்டாவது பதிப்பையும் கண்டிருந்தது. தமிழ் வாசகர்கள் இந்த நாவலை கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் கிளிநொச்சியில் அரங்கு நிறைந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடுகல் நாவலுக்கான அறிமுக விழா இடம்பெற்றது.

சிறுவர்களின் பார்வையில், விடுதலைப் போராட்டத்தை பற்றி இந்த நாவல் பேசுவதாகவும் இது இந்த நூற்றாண்டுகளில் வெளிவந்த நாவல்களில் இல்லாத பண்பு என்றும் கிளிநொச்சி அறிமுக நிகழ்வில் பேசிய யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்களின் மகத்துவத்தை பேசும் இந்த நாவல், தமிழீழ நிழலரசில் இருந்த வாழ்வியலையும் பதிவு செய்துள்ளது. உள்ளடக்கம், மொழிநடை, அழகியல் என்று அத்தனை அம்சங்களும் சிறப்புற்றுள்ள இந்த நாவல், தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எழுத்தாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நாவலாசிரியரும் ஏற்பாட்டாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Latest Offers

loading...