காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய வடக்கு ஆளுநரின் ஜெனீவா பயணம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கால அவகாசம் கோருவதற்காக ஜெனீவா செல்வது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவி யோகராசா கலாரஞ்சினி தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனிவா செல்லுவதற்கு முன்னர் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளுநர் ஜெனீவா செல்வதாக அறிந்திருக்கிறோம். அவரை சந்திக்க முயற்சித்தோம்.

அவர் கொழும்பில் இருப்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆளுநர் போரின் வலியை சுமக்காத போதும் ஒரு தமிழராக அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா செல்வது எமக்கு வருத்தமளிக்கிறது.

இன அழிப்பிலிருந்து எஞ்சியவர்களை நாங்கள் கொண்டு சென்று ஒப்படைத்தோம். அவா்களையே நாங்கள் இன்றளவும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இதேவேளை, ஜெனீவா செல்வதற்கு முன்னர் ஆளுநர் எங்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதன் ஊடாக எங்களுடைய உள்ள கிடக்கைகளை அறிந்து ஜெனீவாவில் நீதியை பேசவேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...