தேன்கூடு அச்சத்தினால் பாடசாலைக்கு விடுமுறை

Report Print Theesan in சமூகம்
57Shares

வவுனியா - சாளம்பைக்குளம், அல் அக்ஷா மகாவித்தியாலய பாடசாலைக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் தேன் கூடு காணப்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாக பாடசாலையின் அதிபரினால் வவுனியா தெற்கு கல்வி வலயப் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்றைய தினம் பாடசாலைக்கு விடுமுறை வழங்கி தேன்கூட்டை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபருக்கு கல்வி வலயப் பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய விடுமுறை தினத்தை வேறு ஒரு தினத்தில் பாடசாலை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்று காலை மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் தேன்கூட்டை அகற்றுவதற்குரிய முயற்சிகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை.

இந்நிலையில் தேன் கூட்டை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.