கொழும்பு இந்துக் கல்லூரியின் கட்டட திறப்பு விழா

Report Print Sinan in சமூகம்

இரத்மலானையிலுள்ள கொழும்பு இந்துக் கல்லூரியில் புதிய கட்டடமொன்று இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய மற்றும் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து கட்டடத்தை திறந்து வைத்துள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஆர்.ராஜ் பாஸ்கரன், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சி.தவயோகராஜா, செயலாளர் வி.கந்தசாமி, பொருளாளர் கைலாசபிள்ளை மற்றும் பாடசாலையின் அதிபர் சி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.