கிளிநொச்சி உருத்திரபுரம் மாணவிகள் சாதனை! குவியும் பாராட்டுக்கள்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உருத்திரபுரத்தை சேர்ந்த தினகராசா சோபிகா மற்றும் நடராசா வினுசா என்பவர்களே தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப்போட்டியில் விளையாடி சாதனை புரிந்துள்ளனர்.

இதில், இலங்கை அணி மூன்றாம் இடத்தையும், நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த விக்ரர் சுவாம்பிள்ளை என்பவருக்கும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.