வவுனியா பாலமோட்டை குளம் சந்திரிக்காவினால் திறந்து வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - பாலமோட்டை கிராமத்திற்கு நேற்று விஜயம் செய்த தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் பணிப்பாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டதுடன் அதற்கான விபர பலகையை திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதி உதவியுடன் 3.7 மில்லியன் ரூபா செலவில் பாலமோட்டை குளமானது மழை நீரை சேமிக்கும் நோக்கத்துடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபாவுடன் பாலமோட்டை கிராமத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்தார்.

மழை நீரை சேமிக்கும் நோக்கத்துடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குளத்தை பற்றிய மேலதிக விபரங்களை சந்திரிக்கா பண்டாரநாயக்க, கமநல சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.விஜியகுமாரிடம் கேட்டறிந்து கொண்டார்.

நிகழ்வில் பாலமோட்டை கிராமத்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவைகளை எமுத்து மூலம் கடிதமாக பெற்றுக் கொண்டதுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

பாலமோட்டை கிராமத்தின் சார்பாக உரையாற்றிய கமக்கார அமைப்பின் தலைவர் ரி.சுரேஸ், பல வருடங்களாக முயற்சி செய்தும் கிராமத்தின் விவசாய காணிகளுக்கு அரச உரிமங்கள் வழங்கப்படவில்லை.

நஞ்சற்ற உணவுகளை தயாரிப்பதற்கும் சந்தை வாய்ப்புக்களையும் உருவாக்கி தருமாறும், விவசாயக் கிணறுகளை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.