இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரியவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

தெற்கு கரையோர பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

குறித்த வேளைகளில் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.