எதிர்வரும் ஏப்ரல் முதல் அரிசி விலையை அதிகரிக்க நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரிசி விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறுபோகத்திலிருந்து, நெல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு நெல் கிலோகிராம் ஒன்றின் விலை 40 ரூபாவாகவும், சம்பா நெல் கிலோகிராம் ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.