இருவேறு பகுதிகளில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் இருவேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நிட்டம்புவ - திஹாரிய பகுதியில் முச்சக்கரவண்டியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இருவர் போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers