அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுக்கும் அரசாங்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து அரச ஊழியர்களுக்கும் உள்ளக விமான பயண வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அரச ஊழியர்கள் உள்ளக விமானம் மூலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, சீகிரியா, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.