கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தை பிரதேசத்தில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பணி செய்த நிறுவனத்திற்குள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு நபரினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் கண் பகுதியில் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 33 வயதான தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவராகும். கொலை செய்த நபரை கொட்டாஞ்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest Offers