வெளிநாட்டு நபரின் மோசமான காரியம்! கொழும்பில் வைத்து சிக்கினார்

Report Print Kamel Kamel in சமூகம்
204Shares

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபான வகைகளுடன் சீனப் பிரஜை ஒருவரை இன்று காலை கொழும்பு - கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இந்த வெளிநாட்டு மதுபான வகைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடமிருந்து 1250 சீன விஷ்கி போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரின் காரில் 60 போத்தல்களும், அவரின் இருப்பிடத்தில் மேலும் பல போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.