மட்டக்களப்பு - வாழைச்சேனையில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த எட்டு உழவு இயந்திரங்களையும், எட்டு சாரதியையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் உள்ள காவத்தமுனை மற்றும் கிரான் பகுதிகளில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக பொத்தானை, பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை, புலிபாய்ந்தகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.