சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - மண்முனை பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஊர்வலம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான இந்த பேரணி மட்டக்களப்பு நகர் ஊடாக கோட்டைமுனை சந்தி வரை சென்று மீண்டும் மட்டக்களப்பு நகர் ஊடாக பிரதேச செயலகத்தினை வந்தடைந்துள்ளது.

இதன்போது பேரணியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கும் அனைத்து மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், பெண்களின் கல்வி நிலையினை உறுதிப்படுத்தல், போதைப்பொருள் பாவனையினை ஒழித்தல் உட்பட பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதன்போது பெண்களின் உரிமையினை வலுப்படுத்தும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.