அரச புலனாய்வு சேவையின் பிரதானி பதவி உயர்வு

Report Print Steephen Steephen in சமூகம்

அரச புலனாய்வு சேவையின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி. நிலந்த, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பெப்ரவரி 28 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா, பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.