பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள்

Report Print Gokulan Gokulan in சமூகம்
60Shares

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறையிடுவதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு 0112 860 860 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கம் ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் சேவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் குறித்த தொலைபேசி இலக்கத்தினுடாக 450 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பற்ற முறையில் வண்டிகளை செலுத்துதல், அதிக இரைச்சலுடன் வானொலி ஒலிக்கப்படுதல் மற்றும் பயணிகளை கௌரவ குறைவான முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வு விரைவில் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.