திருகோணமலையில் பாம்பு கடிக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் பலி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரகடவல பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி வயோதிபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

கோமரகடவல - 5 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஆர்.கே. பியதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயலுக்கு காவலுக்காக சென்ற போதே குறித்த நபர் பாம்பு கடிக்கு இலக்காகி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.