இலங்கை பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்

Report Print Steephen Steephen in சமூகம்

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உலகம் முழுவதும் 10 பெண்களை தெரிவு செய்து வழங்கும் பெண்களை ஊக்குவிக்கும் சர்வதேச விருது இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் நேற்று இந்த விருதை வழங்கியுள்ளார். மெரினித லிவேரா என்ற இலங்கை பெண்ணுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்களுக்காக பணியாற்றி வரும் லிவேரா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த இந்த பெண்ணுடன் பங்களாதேஷ், பர்மா, எகிப்து, ஜோர்தான், அயர்லாந்து, மொண்டினீக்ரோ, பெரு, தன்சானியா, ஜிப்போட்டா ஆகிய நாடுகளின் பெண்களும் இந்த விருதை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.