மாற்றத்தின் சமூக உருவாக்கத்திற்காக கை கோர்க்கும் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Report Print Vamathevan in சமூகம்
17Shares

மாற்றத்திற்கான ஆரம்பமும் அதற்கான உருவாக்கமும் மகளிரிடமிருந்தும் தோற்றம் பெறட்டும் என வாழ்த்தி, மகளீர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் உலகெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அங்கஜன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும்,

அதே பாதையில் மாற்றங்களை உள்ளீர்த்து சமூக மாற்றங்களோடு தாமும் கை கோர்த்து பயணிக்க மன உறுதி கொள்வோம்.

நமது இலங்கை நாட்டின் தேசாபிமானங்களை முழு உலகிற்கும் அடையாளம் காட்டியவர்களாக பெண்களின் வகிபங்கு இன்றியமையாததாகும்.

அரசியல், பொருளாதார, கல்வி, சமூக, கலாச்சாரம் ரீதியாக பெண்கள் பரிணாமம் பெற்றுள்ளமை மேலும், விருத்தியான சமூக வாழ்க்கை உந்துதலை அளிக்கின்றது.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட தொடங்கி இன்றுடன் 108 வருடங்கள். திறமையான பெண் அழகான உலகை படைக்கின்றாள். என்பது இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

மேலும் இம்மாதம் மகளிர் மாதமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை வலுவான கட்டமைப்புக்களை உருவாக்கி சமூக மட்டத்தில் தொடர்ச்சியாக செயற்பட்டு மேலும் விழிப்புணர்வுடன் கூடிய புரிதலை ஏற்படுத்தக்கூடியதாக காணப்படும்.

அண்மையில் உதயமாகிய ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய கட்டமைப்பிலும் மகளிர் அணிகளின் செயற்பாடுகளுக்காக, யாழ். மாவட்டத்தில் தொகுதி ரீதியாக மகளிர் அணி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் சிறந்ததோர் தொடர்புடன் கூடிய வலைபின்னலாகவும் அமையும் என நம்புகின்றோம்.

குடும்ப, சமூக, மற்றும் நிர்வாக கடமைகளின் போது பல்வகைமை கொண்ட ஆளுமை கொண்டவர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றுகின்றார்கள்.

இலங்கையில் அரசியல் ரீதியாகவும் அவர்களுக்கான வலுவான ஒதுக்கீடு ஆரோக்கியமானதே. இந்து சமுத்திர முத்தாக வர்ணிக்கப்படும் இலங்கை தேசத்தை அழகான உலகுடன் இணைப்பதற்கு ஒன்றிணைவுடன் நாம் அனைவரும் பயணிக்க மகளீர் தின நன்னாளில் உறுதி கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.