தொழிநுட்ப உதவியாளர்களுக்கான நியமனங்கள் கிழக்கு ஆளுநரினால் வழங்கி வைப்பு

Report Print Mubarak in சமூகம்

எனது ஆளுநர் காலத்தில் தமது சொந்த இடங்களிலேயே அரச அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் விவசாய திணைக்களத்தில் 12 தொழிநுட்ப உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.