இலஞ்சம் பெற்ற பொலிஸார் விளக்கமறியலில்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட பொலிஸாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபுகஸ்கந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் வைத்து குறித்த உத்தியோகஸ்தர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.