வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் நோக்கில் பொதுமக்களால் விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று காலை மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் குறித்த பேரணி ஆரம்பமாகியுள்ளது.

பிள்ளை யாருடையது என்பதல்ல, எவருடையாதாயினும் அது பிள்ளை எனவே பாசத்துடன் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், பேருந்துகளில் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களும் ஒட்டபட்டுள்ளது.