அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனிதப் புதைகுழி! வெளிவந்தது மற்றுமொரு இரகசியம்

Report Print Jeslin Jeslin in சமூகம்
1564Shares

மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும், போர்த்துக்கீசர்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் என்று தெளிவாக அறிவிக்க முடியும் என, தொல்பொருள் நிபுணர் எல்லாவல மேதாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்தின் அறிக்கையின் படி குறித்த மனித எச்சங்கள் 1400இற்கும் 1650இற்கும் இடைப்பட்ட வருடங்களுக்கு உட்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த மனிதப் புதைகுழி 600 வருடங்கள் பழமையானவை.

குறித்த காலப்பகுதியில் மன்னார் பிரதேசத்தில் போர்த்துக்கீசர்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் இடையில் சண்டை நிகழ்ந்ததாகவும், அதில் கொல்லப்பட்டவர்களின் எச்சமே இவ்வாறு மீட்கப்பட்டிருப்பதாக எல்லாவல மேதாநந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.