திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவில் ஏற்பட்ட மோதல்! நீதிபதி இன்று வழங்கிய உத்தரவு

Report Print Vethu Vethu in சமூகம்

திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு உடைத்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சில கத்தோலிக்க குழுவினரினால் உடைத்து அகற்றப்பட்டது

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சிறு குழுக்கள் இணைந்து அலங்கார வளைவினை உடைத்தமையை பல்வேறு தரப்பினரும் கண்டிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.