நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அரசாங்கம் குடும்ப பெண்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

உலக பெண்கள் தினமான இன்று 'துன்புறுத்தும் தனியார் நுண்கடன் கம்பனிகளை எதிர்த்து நில்' என்ற தொனிப்பொருளில், பெண்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களின் உடல், உள, சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கும் சாராய பார், கள்ளு கடைகளை இழுத்து மூடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளது.