அனைத்துலக பெண்கள் தினத்தில் சுயலாபம் தேடும் நாரதர் வேலை

Report Print Dias Dias in சமூகம்

அனைத்துலக பெண்கள் தினமான மார்ச் 8, தமிழர் வாழ்வியலிலும் முக்கியமான ஒரு நாளாக அனைத்துலக ரீதியாக தமிழரால் அனுஷ்டிக்கப்படும் ஒரு தினமாக திகழ்ந்து வருகின்றது.

உலக வரலாற்றிலேயே அனைத்து துறைசார் அலகுகளிலும் பெண்களுக்கான சம உரிமை கொடுக்கப்பட்டு பெருமை கொண்ட தமிழினம், தொடர்ச்சியாக பெண்கள் தினம் மூலம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகளையும், அதேவேளை இன அழிப்பின் மூலம் இழைக்கப்பட்ட பேர் அநீதிகளையும் உலகவெளியில் இடித்துரைத்தும் வருகின்றது.

உலகளாவிய ரீதியாக அனைத்து இனமக்களாலும் முன்னுரிமை கொடுக்கப்படும் இத்தினத்தினை கனேடிய மண்ணிலும் பல அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் நிலையில், ஐ.பி.சி தமிழ் ஊடகமும் தனது வலையமைப்பு மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக நிகழ்ச்சித் தயாரிப்பு வேலைகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் மார்ச் 8 அன்று கனேடிய வாழ் இளம் தலைமுறையினர் பங்குபெறும் பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சிப் பதிவாக்கல் நிகழவுள்ளது.

அனைத்துலக பெண்கள் தினமானது அனைவராலும் அனுட்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், ஒருவர் மாத்திரம் தான் அதனை அனுஷ்டிக்க வேண்டும் என பிற அமைப்புக்கள் மீது அவதூறுகளை பரப்பி பிரிவினை வாதத்தினைத் தூண்டும் வகையில் ஒரு சிலர், சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருவதைக் கனேடிய மக்கள் கண்டித்துள்ளதுடன், தமது சுயலாபத்திற்காக "நாரதர்" வேலை செய்ய முனையும் இவர்கள் மீது மக்கள் விசனமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறை கொண்டுள்ளவர்கள் போன்று தங்களை வெளிக்காட்ட எத்தனிக்கும் இவர்கள், குறிப்பிட்ட எந்தவொரு அமைப்பினையும் சாராது, ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்னும் மனப்பாங்கில் செயல்பட்டு வருவதாகவும் கனேடிய மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.