பாடசாலை நிகழ்வுகளில் மதுபான அனுசரணைக்கு இடமில்லை

Report Print Ajith Ajith in சமூகம்

பாடசாலை நிகழ்வுகளின்போது மதுபானம் தொடர்பான எவ்வித பிரசாரங்களுக்கும் அரசாங்கம் இடம்கொடுக்காது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் மாபெரும் கிரிக்கட் போட்டிகளுக்கு மதுபான நிறுவனங்கள் அனுசரணை வழங்குவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கோரியபோதே அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டார்.

மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை வர்த்தகர்கள் தமது பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்காக முயற்சித்தாலும் கூட கல்வி அமைச்சு பாடசாலைகளின் ஊடாக அதற்கு இடம்கொடுக்காது என்றும் காரியவசம் குறிப்பிட்டார்.