கிளிநொச்சில் மாலதி, அங்கயற்கன்னி, அன்னை பூபதி ஆகியோரின் படங்களுடன் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

Report Print Yathu in சமூகம்

சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மகளீர் அணியின் ஏற்பாட்டில் பசுமை பூங்காவில் நடைபெற்றுள்ளது.

சர்வதேச பெண்கள் தினமான இன்று பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் வெளிப்படுத்தும் பெண்கள் மாநாடாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், நாடாளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்களில் ஐம்பது வீதம் பெண்களிற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் பெண் மாவீரர்களான மாலதி, அங்கயற்கன்னி ஆகியோரின் படங்களும், தியாகி அன்னை பூபதி அவர்களின் படமும் வைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.