நெடுங்கேணியில் திறக்கப்பட்ட பாரம்பரிய உணவகததில் சர்ச்சை இல்லை

Report Print Theesan in சமூகம்
194Shares

நெடுங்கேணியில் நேற்று திறக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைபாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலகத்தினால் நிர்மானிக்கபட்ட பாரம்பரிய உணவகம் வவுனியா நெடுங்கேணியில் நேற்று முன்னாள் அரசதலைவர் சந்திரிக்காவால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

உணவகம் தொடர்பாக ஏற்புடையதில்லாததும், உண்மைக்கு புறம்பானதுமான சில கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், பிரதேச சபையின் ஒரு சில உறுப்பினர்களாலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த விடயம் தொடர்பாக அனைத்து தரப்புகளிற்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. குறித்த பாரம்பரிய உணவகமானது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தின் நிதியிலேயே அமைக்கப்பட்டது.

உணவகம் வன்னி அறுசுவை உணவகம் என்றே அழைக்கப்படவேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு கட்டடம் அமைக்கப்படுவதற்காக நிதி ஒதுக்கிய போதே அதன் சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று அதனை திறந்து வைப்பதற்கு விருந்தினர்கள் அழைக்கப்பட்டது முதல், வன்னி அறுசுவை உணவகம் என பெயர் வைக்கப்பட்டது வரை அனைத்து ஒழுங்குகளும் தேசிய நல்லிணக்க செயலகத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட செயலகத்தினூடாகவே நடைபெற்றது.

மாறாக பிரதேசசபை தலைவர் என்ற ரீதியில் குறித்த விடயத்தில் எனது தலையீடுகள் எவையும் இருக்கவில்லை என்பதை அனைத்து தரப்புகளிற்கும் தெளிவுபடுத்த விரும்புவதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.