யாழ். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற தென்னிந்திய திருச்சபையின் மகளிர் தின நிகழ்வு!

Report Print Yathu in சமூகம்

தென்னிந்திய திருச்சபையின் மகளிர் தின நிகழ்வும் மாநாடும் யாழ். வட்டுக்கோட்டையில் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

”நன்மைதரும் சமத்துவம்” எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள ஆதீன மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண கலாநிதி டானியல் செல்வரத்தினம் தியாகராஜாவின் ஆலோசனைக்கமைய நிறைவாழ்வு மையத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு அதன் இயக்குனர் கலாநிதி தயாளினி தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் ஜீவாநந்தினி அமலதாஸ் குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பெண்களின் சமத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராயர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த தலைப்பில் கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களிற்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.