கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் இருந்து போதைப்பொருள் மீட்பு!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றுமிடத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான போதைமத்திரைகளை மீட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

90 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான இரண்டாயிரத்து இரண்டு போதை மாத்திரைகள் அடங்கிய பொதிகளே கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றும் இடத்தில் மீட்கப்பட்டுள்ளது.

மெட்ரம்பேமடின் என்ற வகையை சேர்ந்த போதை மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.