மாந்தை மேற்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

Report Print Ashik in சமூகம்
63Shares

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல வேலைத்திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் கற்பக விநாயகர் ஆலய புனரமைப்பு பணிகள், ஈச்சலவாக்கை மீனாட்சி அம்மன் ஆலயம், பெரியமடு கிறிஸ்து அரசர் ஆலயம், விடத்தல் தீவு அடைக்கல மாதா ஆலயம் என்பவற்றின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் இணைப்பாளர் ப.மதன், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் மாந்தை மேற்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டு குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தனர்.