வீட்டில் உறங்கி கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு

Report Print Steephen Steephen in சமூகம்

மாவனெல்லை பொலிஸ் பிரிவின் தானகம என்ற பிரதேசத்தில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 37 வயதான நபர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்களை கைது செய்ய மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.