விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

விசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இரத்மலானை காமினி ஒழுங்கை பிரதேசத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக கல்கிஸ்சை பொலிஸாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசா அனுமதியின்றி தங்கியிருந்த வெளிநாட்டவர்களை கைது செய்துள்ளனர்.

21 மற்றும் 35 வயதான நைஜீரிய பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Latest Offers