பத்து பேரை தூதுவர்களாக நியமிக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

பத்து பேரை தூதுவர்களாக நியமிக்க வெளிவிவகார அமைச்சு நேற்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிபாரிசுடன் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிவிவகார அமைச்சின் புரோட்டோகால் தலைவராக செயற்படும் எம்.ஆர்.ஹசன் துருக்கிக்கான இலங்கை தூதுவராகவும் மற்றும் சிங்கப்பூரிற்கான இலங்கையின் பதில் தூதுவராக செயற்படும் காத்தான்குடியை சேர்ந்த அமீர் அஜ்வத் ஆகியோரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உறுப்பினர்களாவர்.