மட்டக்களப்பில் மாபெரும் மகளிர் பேரணி

Report Print Kumar in சமூகம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் மகளிர் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று மாலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இப்பேரணி இடம்பெற்றுள்ளது.

கிழக்கினை மீட்போம் எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியின் போது மகளிர் அணி தலைவி மனோகரியினால் சர்வதேச மகளிர் தின பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், மகளிர் தினம் தொடர்பான விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில் முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுபா சக்ரவர்த்தி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பாரதி கெனடி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், சர்வதேச தொடர்பாளர் துரைநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.