கத்தி வெட்டுக்கு இலக்கான பொலிஸார்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பதுளை, பள்ளக்கட்டு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மீன் கடையை அகற்ற முற்பட்ட பொலிஸார் கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கடை உரிமையாளரால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு வெட்டுகாயங்களுக்கு இலக்ககாகியுள்ளார்.

வெட்டு காயங்களுக்கு இலக்கான நபர் அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளக்கட்டுவை பகுதியின் அபிவிருத்தி வேலைகளை வீதி அபிவிருத்தி சபையினர், எல்ல பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நிலையில், அங்கு சட்டவிரோதமாக இயங்கி வந்த மீன் கடையை அகற்ற முற்பட்டபோதே குறித்த வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய மீன் வெட்டும் கத்தி பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.