பிரதேசசபை உறுப்பினரின் வீட்டிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு

Report Print Gokulan Gokulan in சமூகம்

அம்பலன்கொட பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த சம்பவத்தில் எவரும் எந்தகாயங்களுக்கும் இலக்காகாமல் தப்பியுள்ளதாகவும், தனி நபர்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers