ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்பு உப குழு இலங்கைக்கு விஜயம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஐக்கிய நாடுகளின் சித்திரவதை தடுப்பு உப குழு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. இந்த நிலையில் குறித்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த குழு ஆர்ஜன்டீனா, பாலஸ்தீனம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இலங்கை விஜயத்துக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரியவருகிறது.

இதுவரை இந்த குழு சர்வதேச ரீதியில் 65 நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு கண்காணிப்புகளை நடத்தியுள்ளது.