பிரபல பாடகரின் மனைவியின் அட்டகாசம்! நாயினால் ஏற்பட்ட வன்முறை

Report Print Vethu Vethu in சமூகம்

ராகமையில் நாயினால் அடி தடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் மனைவி தொடர்பில் செய்தி வெளியாகி உள்ளது.

வீட்டை சுற்றியுள்ள மக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் நாய் வளர்த்த பிரபல பாடகரின் மனைவி 20000 அபராதம் செலுத்தி குற்றத்தில் இருந்து தப்பியுள்ளார்.

குறித்த நாய் பெண் ஒருவரை கடித்துள்ளது. நாய் கடிக்குள்ளான பெண்ணின் மருமகள் நியாயம் கோரி பாடகரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு பாடகரின் மனைவிக்கும் நியாயம் கேட்டு சென்ற பெண்ணும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றியமையினால் இருவரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சம்பவம் ராகமை பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது.

இறுதியில் சம்பவத்தை சமாதனப்படுத்திய பொலிஸார் 20000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு பாடகரின் மனைவிக்கு தெரிவித்துள்ளார்.