யாழ். வேலணையில் சிரமதான பணி முன்னெடுப்பு

Report Print Sumi in சமூகம்

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் புதர் மண்டி காணப்படும் யாழ். வேலணையின் சில பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதேச சபையின் தவிசாளர் கருணாகருமூர்த்தி தலைமையில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பற்றைகள் அதிகரிப்பதனால் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், சுகாதார சீர்கேடுகள் கலாச்சார சீர்கேடுகள் அதிகரித்து வருவதாக தெரிவித்து சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் புதர் மண்டி கிடக்கும் காணிகளை துப்பரவு செய்யவேண்டும் என அண்மையில் பிரதேச சபையில் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் வேலணை சிற்பனை பகுதியின் வீதியோரங்களில் காணப்படும் பற்றைகளை அகற்றும் பணி சபையால் சிரமதான முறையில் துப்பரவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest Offers