ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துக்கான புதிய வதிவிடப்பிரதிநிதி

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட வதிவிட பிரதிநிதியாக ஜோர்ன் சொரென்சென் பதவியேற்றுள்ளார்.

அவர் தமது நியமன ஆவணங்களை அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவிடம் கையளித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இலங்கைக்கு மக்களின் நிலையான மனித அபிவிருத்தியை 2030இல் அடையும் செயற்பாட்டை முன்னெடுத்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சோரன்சென் ஏற்கனவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் 24 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.