திருகோணமலையில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தினரினால் போராட்டமும், கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்று கூடிய மக்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் இரண்டு வருடங்கள் கடந்துள்ளது.
இந்த நிலையில் தமக்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என போராட்டத்தை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.